பஸ் கட்டணத்தை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் சங்கம் தெரிவிக்கின்றது.
எரிப்பொருள் விலையேற்றத்துடன், 15 வீத கட்டண அதிகரிப்பை மேற்கொள்ள வேண்டும் என அந்த சங்கங்கள் குறிப்பிடுகின்றன.
எனினும், கொவிட் பரவலுக்கு மத்தியில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை அழைத்து செல்ல வேண்டுமாக இருந்தால், 15 வீத பஸ் கட்டண அதிகரிப்பு போதாது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.
இந்த நிலையில், ஆகக் குறைந்தது 25 வீத கட்டண அதிகரிப்பையேனும் மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக பஸ் உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர்.
இதேவேளை, முச்சக்கரவண்டி கட்டணங்களிலும் எதிர்வரும் நாட்களில் மாற்றங்களை ஏற்படுத்த கலந்தாலோசிக்கப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது.
