ஹபுத்தலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் வசிக்கும், ஆடைத் தொழிற்சாலையில் பணிப்புரியும் 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பலாங்கொடை ஆடைத் தொழிற்சாலையொன்றில் பணிப்புரியும் 18 பெண்களுக்கே இவ்வாறு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஹபுத்தலையிலிருந்து பலாங்கொடை வரை, இவர்கள் அனைவரும் ஒரே பஸ்ஸில் பயணித்துள்ளமை, விசாரணைகளின் ஊடாக தெரியவந்துள்ளது.
ஆடைத் தொழிற்சாலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் எழுமாறாக நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக, ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
அதனைத் தொடர்ந்து, அதே தொழிற்சாலையில் பணிப்புரிந்த 33 பேருக்கு PCR பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன.
இவ்வாறு நடத்தப்பட்ட PCR பரிசோதனைகளின் ஊடாக 18 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவினர் தெரிவிக்கின்றனர்.
இந்த 18 பேரும் வேலைக்கு ஒரே பஸ்ஸில் பயணிக்கின்றமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இவர்களுடன் நெருங்கி பழகியவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக ஹபுத்தலை சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.
