பிறந்து 18 நாட்களேயான சிசுவொன்று மினுவங்கொட − பில்லவத்த பகுதியில் உயிரிழந்துள்ளதாக மினுவங்கொட சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவிக்கின்றது.
பிறப்பிலேயே விசேட தேவையுடைய குறித்த சிசு, நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 18ம் திகதி உயிரிழந்துள்ளது.
உயிரிழந்த சிசுவின் சடலம் மீது நடத்தப்பட்ட ரெபிட் அன்டீஜன் பரிசோதனைகளில் குறித்த சிசுவிற்கு கொவிட் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சிசுவின் பெற்றோருக்கு நடத்தப்பட்ட அன்டீஜன் பரிசோதனையில், பெற்றோருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என சுகாதார பிரிவு குறிப்பிடுகின்றது.
இந்த சிசுவின் பெற்றோர் உள்ள குடும்ப உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார தரப்பு தெரிவிக்கின்றது. (TC)
