Our Feeds


Friday, June 18, 2021

www.shortnews.lk

21ம் திகதி பயணக் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டாலும் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள காரியங்களின் பட்டியல் இதுதான்.

 

      


(எம்.மனோசித்ரா)


பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் காலப் பகுதியில் திருமணங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் வகையிலான பொதுக் கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள பயணக்கட்டுப்பாடுகள் ஏற்கனவே அறிவித்தமைக்கமைய எதிர்வரும் 21 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படும்.

எனினும் மீண்டும் 23 ஆம் திகதி புதன்கிழமை இரவு 10 முதல் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும்.

எவ்வாறிருப்பினும் மாகாணங்களுக்கிடையிலான எவ்வித பொது போக்குவரத்துக்களும் முன்னெடுக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்டபிட்டார். பயணக்கட்டுப்பாடுகள் தொடர்பில் ஆராய்வதற்கு இன்று (18) வெள்ளிக்கிழமை கூடிய கொவிட் -19 செயலணி கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

மேலும் பயணக்கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் இந்த காலப் பகுதியில் திருமணங்கள் மற்றும் மக்கள் ஒன்று கூடும் வகையிலான பொது கூட்டங்களை நடத்துவதற்கு தடை விதிப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்பட மாட்டாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »