கல்முனை பிராந்திய சுகாதார பிரிவில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் 3 பேர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக கல்முனை பிராந்திய சுகாதார பணிப்பாளர் குணசிங்கம் சுகுணன் தெரிவித்தார்.
அம்பாறை- கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனைக்கு உட்பட்ட ஆலையடிவேம்பைச் சேர்ந்த 70 வயதுடைய பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அதேபோன்று அம்பாறை வைத்தியசாலையில் சம்மாந்துறையைச் சேர்ந்த ஆண் ஒருவர், கல்முனைக்குடி அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மேலும் மருதமுனையைச் சேர்ந்த ஆண் ஒருவரும் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
