பாகிஸ்தானில் இன்று இரு ரயில்கள் ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதால் குறைந்தபட்சம் 30 பேர் பலியானதுடன் மேலும் 50 பேர் காயமடைந்துள்ளனர்.
சிந்து மாகாணத்தின் கோட்கி மாவட்டத்திலுள்ளள தார்கி எனும் நகரில் இன்று திங்கட்கிழமை காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கராச்சியிலிருந்து சார்கோதா நகரை நோக்கிச் சென்ற மீலாத் கடுகதி ரயில் தடம் புரண்டதையடுத்து, அந்த ரயில், ராவல்பிண்டியிலிருந்து வந்துகொண்டிருந்த சேர் சயீத் கடுகதி ரயிலுடன் மோதியதகாவும் பாகிஸ்தான் புகையிரத திணைக்களத்தின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
15- 20- பயணிகள் மீலாத் கடுகதி ரயிலில் இன்னும் சிக்கியுள்ளனர் எனவும் அவர்களை மீட்பதற்காக பாரிய இயந்திரங்களை கொண்டுவரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுடவதாகவும் கோட்கி நகர பொலிஸ் அதிகரி உமர் துபெய்ல் தெரிவித்துள்ளார்.
