இலங்கையில் இடம்பெற்ற இறுதி 500 கொனோரா உயிரிழப்புக்கள், 10 நாட்களுக்குள் நேர்ந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம் உறுதியாகியுள்ளது.
நாட்டில் பதிவான முதல் 500 கொவிட் உயிரிழப்புக்களும் 343 நாட்களில் பதிவாகியிருந்ததுடன், அடுத்த 500 கொவிட் உயிரிழப்புக்களும் 72 நாட்களில் பதிவாகியிருந்தன.
எனினும், 1000 முதல் 1500 வரையான கொவிட் உயிரிழப்புக்கள் 13 நாட்களில் பதிவான நிலையில், இறுதி 500 கொவிட் உயிரிழப்புக்கள் 10 நாட்களில் பதிவாகியுள்ளன.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் பிரகாரம், இறுதியாக 101 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியிருந்தன.
இலங்கை வரலாற்றில் கொவிட் தொற்றினால் ஒரே தினத்தில் அறிவிக்கப்பட்ட அதிகூடிய உயிரிழப்புக்களாக இது அமைந்திருந்தது.
இந்த நிலையில், இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக இதுவரை 2011 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (TC)
