Our Feeds


Wednesday, June 2, 2021

SHAHNI RAMEES

5,000 ரூபாய் கொடுப்பனவு இன்று முதல் ஆரம்பம்!


 நடமாட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டுள்ள தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்காக 5,000 ரூபாய் இடர்கால கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பமாகவுள்ளது.

அரசாங்கத்தின் பல்வேறு கொடுப்பனவுகளை பெரும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்காகவும் நடமாட்ட கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள குடும்பங்களுக்காகவும் இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளது.

இதற்காக சுமார் 30 பில்லியன் ரூபாய் நிதியை ஒதுக்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

முதியோர் கொடுப்பனவு, விவசாய, கடற்றொழில் ஓய்வூதிய வேதனம், சமுர்தி பயனாளர்களுக்குமான கொடுப்பனவோடு இந்த கொடுப்பனவின் எஞ்சிய பணத்தை சேர்த்து 5,000 ரூபாய் வழங்கப்படவுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »