Our Feeds


Wednesday, June 2, 2021

SHAHNI RAMEES

போலி ஆவணங்களை பயன்படுத்தி பயணிக்க முயற்சித்த நால்வர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்!

 


    போலி விசா மற்றும் கடற்படை அடையாள அட்டையை பயன்படுத்தி சுற்றுப் பயணம் மேற்கொள்வதாக கூறி ருமேனியா நோக்கி பயணிக்க முயற்சித்த 4 பேர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பொறுப்பேற்கப்பட்டவர்கள் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு பகுதிகளை சேர்ந்த 21 முதல் 41 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

விமான நிலையத்திற்கு பிரவேசித்த குறித்த நபர்கள் தொடர்பில் சந்தேகம் எழுந்ததையடுத்து குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் அவர்களை சோதனை செய்தனர்.

அவர்களில் இரண்டு பேரிடம் இருந்து ருமேனியா விசா அனுமதி பத்திரம் உள்ளமை கண்டறியப்பட்டது.

அத்துடன் கடற்படையின் அடையாள அட்டை உள்ளிட்ட போலி ஆவணங்களை தயாரித்து இவ்வாறு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயற்சித்தமையும் கண்டறியப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குடிவரவு குடியகல்வு திணைக்களம் முன்னெடுத்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »