மாத்தளை பலாபத்வல பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையின் கிளையொன்றில் கடமையாற்றும் ஊழியர்களில் 60 பேர், திடீரென சுகயீனமடைந்துள்ளார்.
அவர்கள் அனைவரும் மாத்தளை பெரியாஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆடைத்தொழிற்சாலையின் ஊழியர்களுக்கு கடந்த 16ஆம் திகதியன்று கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அவர்களுக்கு பல்வேறான அறிகுறிகள் தென்பட்டமையை அடுத்தே, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
