சீனாவினால் நிவாரண உதவித்திட்டத்தின் கீழ் வழங்கவிருந்த 6 மில்லியன் கொவிட் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள இடையூறு விளைவிக்கப்பட்டதாக கூறப்படும் விசேட வைத்தியர் தொடர்பில் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகளை நடத்த வேண்டும் என சுகாதார தரப்பினர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சீன தடுப்பூசிகள் தொடர்பில் போலி பிரசாரம் செய்தமையினால், சீனாவினால் வழங்க தயாராகவிருந்த தடுப்பூசிகளை இந்த வைத்தியர் உதாசீனம் செய்துள்ளதாக சுகாதார தரப்பு கூறியுள்ளது.
சீனாவினால் வழங்க திட்டமிடப்பட்டிருந்த 6 மில்லியன் தடுப்பூசி கிடைத்திருக்கும் பட்சத்தில், தற்போது நாட்டில் பரவி வரும் கொவிட் அலையை குறிப்பிடத்தக்களவு கட்டுப்படுத்தியிருக்க முடியும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த நிலைமையின் கீழ் 6 மில்லியன் தடுப்பூசிகளுக்கு பதிலாக 5 லட்சம் தடுப்பூசிகள் மாத்திரமே கிடைத்ததாகவும் அவர்கள் கூறுகின்றனர். (trueceylon)
