சர்வதேச ரீதியில் கடந்த 7 நாட்களில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலை, கொவிட் தொடர்பிலான தரவுகளை வெளியிடும் பிரபல இணையத்தளமான வேல்ட்ஓமீற்றர் இணையத்தளம் வெளியிட்டுள்ளது.
இதன்படி, கடந்த ஒரு வார காலத்தில் சர்வதேச ரீதியில் கொவிட் தொற்றினால் பாதிக்கப்படும் நாடுகள் பட்டியலில் இலங்கை 21வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த ஒரு வார காலத்தில் இலங்கையில் 20,290 கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
அத்துடன், கடந்த 7 தினங்களில் இலங்கையில் 403 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன.
ஒரு வார காலத்தில் அதிகளவிலான பாதிப்புக்களை எதிர்நோக்கிய நாடுகள் பட்டியலில் இந்தியா முதல் இடத்தை பெற்றுக்கொண்டுள்ளது.
இந்தியாவில் கடந்த ஒரு வார காலத்தில் 7 லட்சத்து 979 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 22 ஆயிரத்து 378 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்தியாவிற்கு அடுத்ததாக பிரேஸில், ஆஜன்டீனா, கொலம்பியா, அமெரிக்கா, ரஷ்யா, ஈரான், சிலி, இந்தோனேஷியா, பிலிபைன்ஸ், மலேசியா, பிரித்தானியா, துருக்கி, தென் ஆபிரிக்கா, பிரான்ஸ், ஈராக், ஸ்பையின், பேரு, உருகுவே, நேபாளம் ஆகிய நாடுகள் காணப்படுகின்றன.
கடந்த ஒரு வார காலத்தில் உலகம் முழுவதும் 26 லட்சத்து 96 ஆயிரத்து 89 பேர் கொவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 70 ஆயிரத்து 898 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. (TC)
