நாட்டில் வேகமாக பரவி வரும் கொரோனா தொற்று நோயினால் அனைத்து மாவட்டங்களிலும் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் பாதிக்கப்படுவோருக்கான அனைத்து வசதிகளும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் கிடைக்காத நிலையும் ஏற்ப்பட்டுள்ளது.
இந்நிலையை கருத்திற்கொண்டு பலரும் தங்களினால் முடிந்த உதவிகளை செய்து வரும் நிலையில் கொவிட் தொற்றால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள திருகோணமலையில் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூப் நிவாரண பணிகளை தொட்ர்ந்தும் முன்னெடுத்து வருகிறார். அந்த வகையில் இன்று கிண்ணியா, மூதூர் வைத்தியசாலைகளுக்கு தேவையான ஒரு தொகை கட்டில்கள் வைத்தியசாலை பொறுப்பதிகாரிகளான Dr. ஜிப்ரி மற்றும் Dr. கயல்விழி ஆகியோரிடம் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மூலம் அன்பளிப்பு செய்யப்பட்டது.


