கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான சுமார் 8000 பேர், சிகிச்சை மத்திய நிலையங்களுக்கு அழைத்து செல்லாது, தமது வீடுகளிலேயே தங்க வைக்கப்பட்டுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவிக்கின்றது.
அத்துடன், கொவிட் தொற்றினால் கவலைக்கிடமான நிலைமைக்கு சென்று, ஒக்சிஜன் வழங்கப்படும் சுமார் 330 நோயாளர்கள் நேற்று முன்தினம் (31) வரை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த சங்கம் குறிப்பிடுகின்றது.
கடந்த 27ம் திகதி ஒக்சிஜன் வழங்கப்படும் 147 நோயாளர்கள் வைத்தியசாலைகளில் இருந்ததாகவும், அது தற்போது 330 வரை அதிகரித்துள்ளதாகவும் அந்த சங்கம் சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால், எதிர்வரும் தினங்களில் சுகாதார துறையினர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கும் அதேவேளை, நோயாளர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் அச்சம் வெளியிடுகின்றது.
