சிஐடியின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் சிறையிலுள்ள பிரேமலால் ஜயசேகர ஆகியோரை நாளைய (08) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
இதேவேளை நாட்டில் ஏற்பட்டுள்ள கொவிட்-19 வைரஸ் தொற்று நிலைமைகைள கருத்தில் கொண்டு நாளை இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளை ஒரு நாளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை காலை சபாநாயகர் தலைமையில் கூடிய கட்சி தலைவர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் காலை 10 மணி தொடக்கம் பிற்பகல் 4.30 மணி வரை இன்று அமர்வுகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
