Our Feeds


Monday, June 7, 2021

www.shortnews.lk

வீட்டுக்குள் உயிரிழந்து கிடந்த இளம் தம்பதி - தற்கொலையா ? என பொலிஸ் விசாரனை.

 




வெல்லவாய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்லபாவ பகுதியில் உள்ள வீடொன்றில் உயிரிழந்த நிலையில் இளம் தம்பதியின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, குறித்த சடலங்கள் நேற்று (06) பிற்பகல் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எம்பிலிபிட்டிய பகுதியை சேர்ந்த 36 வயது ஆண் மற்றும் ஹெட்டிபொல பகுதியை சேர்ந்த 21 வயதுடைய இளம் யுவதி ஆகியோரே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

அவர்கள் இருவரும் வெல்லவாய பகுதியில் உள்ள குறித்த வீட்டில் வாடகைக்கு வசித்து வந்துள்ள விடயம் விசாரணைகளில் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில், அவர்கள் இருவரும் தற்கொலை செய்திருக்கலாம் என, பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். எனினும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.

சம்பவம் தொடர்பில் வெல்லவாய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »