Our Feeds


Wednesday, June 2, 2021

www.shortnews.lk

இலங்கை பாராளுமன்றத்தை வாட்டும் கொரோனா! - நேற்றைய விபரம் இதோ…

 



மேலும் மூன்று நாடாளுமன்ற பொலிஸ்அதிகாரிகளுக்கு நேற்று (1) கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மூன்று அதிகாரிகளில் இரண்டு பேர் பொலிஸ் பரிசோதகர்களாக இருந்தனர்.

நாடாளுமன்றில் இதுவரை 9 பொலிஸ் அதிகாரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களில் 5 பேர் இன்னும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நான்கு பேர் சிகிச்சை மையங்களை விட்டு வெளியேறியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து நாடாளுமன்ற பொலிஸ் பிரிவின் 75 அதிகாரிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதற்கிடையில், நாடாளுமன்றம் 8 ஆம் திகதி மீண்டும் கூட்டப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »