(எச்.எம்.எம்.பர்ஸான்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பிறைந்துறைச்சேனை ஐஸ் மோல் பின் வீதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து இன்று (10) ஆம் திகதி சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் சிறுவனின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
பெற்றோருடன் இரவு 11 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த நிலையில் குறித்த சிறுவன் காணமால் போயுள்ளதாகவும், பின்னர் நீண்ட நேரத்திற்கு பிறகு சிறுவனை தேடிப் பார்த்த போது சிறுவன் கிணற்றினுள் உயிரிழந்த நிலையில் காணப்பட்டதாகவும் பெற்றோர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்ட ஆரம்பக் கட்ட விசாரணையின் போதே குறித்த சிறுவனின் தந்தையை சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மரணமடைந்த நான்கு வயதுடைய நளீம் ஹாபில் எனும் சிறுவனின் உடலை சம்பவம் நடைபெற்ற இடத்துக்கு வருகை தந்த வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி எச்.எம்.முஹமட் பஸீல் உத்தரவுக்கமைய சிறுவனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
