நாட்டில் தற்போது காணப்படுகின்ற அசாதாரண நிலைமையினால், பாடசாலைகளை மீள ஆரம்பிக்கின்றமை குறித்து, இதுவரை இறுதித் தீர்மானம் எட்டப்படவில்லை என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், பாடசாலை மாணவர்களின் சுகாதார நிலைமையை உறுதிப்படுத்தி, கூடிய விரைவில் பாடசாலைகளை ஆரம்பிக்க திட்டமிட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
