Our Feeds


Thursday, June 17, 2021

www.shortnews.lk

ஜூலை முதலாம் திகதி இரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ள இரண்டு மெளலவி ஆசிரியர்கள்!

 



(எம்.எப்.எம்.பஸீர்)


உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்காக கைது செய்யப்பட்டு சமூகங்களிடையே வெறுப்புணர்வை தூண்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிரேஷ்ட சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் குறித்தான விவகாரத்தில் கைது செய்யப்பட்ட இரு மெளலவி ஆசிரியர்கள் எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி நீதிவானுக்கு இரகசிய வாக்குமூலம் வழங்கவுள்ளனர்.

குற்றவியல் சட்டக் கோவையின் 127 ஆவது அத்தியாயத்தின் கீழ் இந்த வாக்கு மூலத்தை வழங்க, அவ்விளம் ஆசிரியர்கள் இருவர் சார்பிலும் கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கோரிக்கையை முன்வைத்து அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொண்டுள்ள நிலையிலேயே எதிர்வரும் ஜூலை முதலாம் திகதி வாக்குமூலங்கள் பெற நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட, புத்தளம் – கரைதீவு அல் சுஹைரியா மத்ரஸாவின் ஆசிரியர்களாக செயற்பட்டதாக கூறப்படும் 26,27 வயதுடைய மொஹம்மட் ஜவ்பர் லுக்மான் ஹகீம், மொஹம்மட் நசுருத்தீன் மொஹம்மட் வசீர் ஆகியோர் சிஐடி எனப்படும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் இருவரும் ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ்வுக்கு எதிராக சாட்சியமளிக்க சிஐடியினரால் வற்புறுத்தப்பட்டுள்ளதாக அவர்கள் சார்பில் உயர் நீதிமன்ரில் இரு அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »