Our Feeds


Thursday, June 10, 2021

www.shortnews.lk

கொவிட் மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கான காரணம்!

 

 உடனடி மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளாமையே, நாளாந்த கொவிட் மரணங்களின் அதிகரிப்புக்கு காரணம் என சுகாதாரத் தரப்பினர் தெரிவிக்கின்றனர்.


சுகாதார மேம்பாட்டு பணிமனையின் பணிப்பாளர், விசேட வைத்தியர் ரஞ்சித் பட்டுவாந்துடாவ இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகின்றவர்களில் 80 சதவீதமானவர்கள் பாரதூரமான அறிகுறிகளை வெளிப்படுத்துவதில்லை.

20 சதவீதமானவர்களுக்கே அவ்வாறான நிலைமை ஏற்படுகிறது.

இவ்வாறு பாரதூரமான அறிகுறிகளைக் கொண்டுள்ள கொவிட் நோயாளர்களை உடனடியாக அடையாளம் காண வேண்டியது அவசியமாகும்.

அவ்வாறு இல்லாத பட்சத்தில், குறித்த நோயாளர்களை குணப்படுத்துவது சிரமமாகும்.

எனவே, விரைவாக அவர்கள் மருத்துவ ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.



Subscribe to this Blog via Email :
Previous
Next Post »