Our Feeds


Saturday, June 19, 2021

www.shortnews.lk

ஈரான் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி தெரிவு

 



அரபுலகில் ஷீயா மதத்தை பின்பற்றும் நாடாக அறியப்பட்டு வரும் ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.


ஈரானின் தற்போதைய ஜனாதிபதி ஹசன் ரவ்ஹானியின் பதவிக் காலம் முடிந்த நிலையில், ஈரான் ஜனாதிபதி தேர்தல் நேற்று (18) வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காலை ஏழு மணியளவில் தொடங்கி நள்ளிரவு வரை இந்த தேர்தலுக்கான வாக்களிப்பு நடைபெற்றது. எனினும், ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஆர்வமில்லாமல் வாக்களித்ததன் காரணமாக குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குகள் பதிவாகின.

இந்த நிலையில் தேர்தல் முடிவுகள் இன்று (19) சனிக்கிழமை வெளியாகின. இதற்கமைய, ஈரானின் புதிய ஜனாதிபதியாக இப்ராஹிம் ரைசி அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்த தேர்தலில், இப்ராஹிம் ரைசி, ரிசர்வ் வங்கி முன்னாள் தலைவர் அப்துல் நாசர் ஹெமத்தி உள்ளிட்ட நால்வர் போட்டியிட்டனர்.

புதிய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்டுள்ள இப்ராஹிம் ரைசி உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியாவார். எனினும் இவருக்கு  அரசியல் சார்ந்த அனுபவம் இல்லை. ஈரான் மதத் தலைவர் அயத்துல்லா அலி காமெனியின் ஆதரவாளராக நீண்ட காலமாகச் செயல்பட்டு வருகிறமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா விதித்த பொருளாதாரத் தடையால் ஈரான் கடுமையான பொருளாதார நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் காரணமாக இத்தேர்தலில் குறைவான எண்ணிக்கையிலேயே வாக்குப் பதிவு நடைபெற்றது.

2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 70 சதவீதத்க்கும் அதிகமான வாக்குகள் பதிவான நிலையில், இம்முறை 60 சதவீதத்க்கும் குறைவான வாக்குகள் பதிவாகி உள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »