Our Feeds


Saturday, June 19, 2021

www.shortnews.lk

பயணக் கட்டுப்பாட்டை மீறியவர்களுக்கு முழங்காலில் இருக்க வைத்து தண்டனை.

 



ஏறாவூர் பகுதியில் பயணக்கட்டுப்பாடுகளை மீறி வீதிகளில் நடமாடியவர்களை, தலைக்கு மேலே கைகளை உயர்த்தியவாறு வீதியில் முழங்காலில் இருக்க வைத்து இராணுவத்தினரால் தண்டனை வழங்கிய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.


நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடு அமுலிலுள்ள போதும், போக்குரவத்து இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ்வாறான நிலையிலேயே ஏறாவூர் பிரதேசத்தில் மாத்திரம் நடமாடியவர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டை பாராட்டியும், கண்டனம் வெளியிட்டும் சமூகவலைத்தளங்களில் கருத்துக்கள் பதிவேற்றப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது. (V)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »