Our Feeds


Wednesday, June 16, 2021

www.shortnews.lk

வெலிகம நகர சபை தலைவர் பதவியிலிருந்து ரெஹான் நீக்கம். - இன நல்லுறவுக்கு பாலமாக இருப்பவர்.

 



வெலிகம நகர சபை தலைவர் பதவியிலிருந்து ரெஹான் ஜயவிக்ரம  நீக்கப்பட்டவுள்ளார்.


இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவதற்கான அறிவித்தல் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அரசாங்க அச்சகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளது.


ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினராக வெலிகம நகர சபை தேர்தலில் போட்டியிட்டு நகர சபை தலைவராக தெரிவுசெய்யப்பட்ட இவர், கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியில் போட்டியிட்டார்.

இதனையடுத்து ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்புரிமையிலிருந்து நீக்கப்பட்டார். இதற்கு எதிராக இவர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளரின் அறிவுறுத்தலின் பிரகாரம், வெலிகம நகர சபை தவிசாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் அரசாங்க அச்சக திணைக்களத்தினால் விரைவில் வெளியிடப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெலிகம பிரதேச முஸ்லிம் மக்களுக்காக இவர் தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தமை குறிப்பிடத்தக்கது.




Subscribe to this Blog via Email :
Previous
Next Post »