Our Feeds


Monday, June 7, 2021

www.shortnews.lk

கொரோனா பாதிப்பு குறைந்த மாவட்டம் மற்றும் அதிக பாதிப்பு கொண்ட மாவட்டங்களின் பட்டியல் இணைப்பு.

 



இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 2,976 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாக இராணுவத்தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், குறித்த கொரோனா நோயாளர்களில் அதிகளவானவர்கள் கம்பஹா மாவட்டத்தில் பதிவாகியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கம்பஹா மாவட்டத்தில் மாத்திரம் 805 கொரோனா நோயாளரகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


மன்னார் மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களிலும் 1000திற்கும் அதிகமான கொவிட் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.


1000 திற்கு குறைவான கொவிட் தொற்றாளர்கள் காணப்பட்ட வவுனியா மாவட்டமும், நேற்றைய தினத்துடன் 1000 தொற்றாளர்களை கடந்துள்ளது.


இதன்படி, மன்னார் மாவட்டத்தில் இதுவரை 672 தொற்றாளர்கள் மாத்திரமே பதிவாகியுள்ளதாக கொவிட்−19 தடுப்புக்கான தேசிய செயற்பாட்டு மையம் தெரிவிக்கின்றது. 










Subscribe to this Blog via Email :
Previous
Next Post »