Our Feeds


Wednesday, June 30, 2021

www.shortnews.lk

‘மக்கள் கஷ்டப்படுவது அரசாங்கத்துக்கு தெரியாமலில்லை’ - அமைச்சர் காமினி லொக்குகே

 



தனியாக பாராளுமன்றம் வந்த ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான  ரணில் விக்கிரமசிங்க, அடுத்த முறை அரசாங்கத்தைக் கைப்பற்றலாமென நினைப்பதாகத் தெரிவிக்கும் அமைச்சர் காமினி லொக்குகே, நாட்டு மக்கள் பிரச்சினைகளுக்கு மத்தியில் வாழ்வது அரசாங்கத்துக்கு தெரியாமல் இல்லை எனவும் தெரிவித்தார்.


இதுதொடர்பில் மேலும் தெரிவித்த அமைச்சர் காமினி லொக்குகே,  யதார்த்த நிலைமைகளைப் புரிந்துக்கொள்ளாது, விவசாயிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று  உரத் தட்டுப்பாடு தொடர்பில் போராட்டங்களை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் சிரமங்களுக்கு மத்தியில் வாழ்கிறார்கள் என்பது அரசாங்கத்துக்குப் புரியாமல் இல்லை. ஆனால் உலகம் முழுவதிலும் இதே பிரச்சினையே காணப்படுகிறது எனவும் அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.

எனினும் பலமிக்க அரசாங்கம் என்றவகையில் இப்போராட்டங்களுக்கு அரசாங்கம் முகங்கொடுக்கும். எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ அடுத்த முறை தனக்கு வாக்குகள் கிடைக்குமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார். இதேபோல, தேசிய மக்கள் சக்தியும் தங்களுக்கு இல்லாதுபோயுள்ள ஆசனங்களை, அடுத்த தேர்தலில் பெற்றுக்கொள்ள முடியுமென எதிர்பார்க்கிறது எனவும் கூறினார்.

மறுபுறத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தனியாகப் பாராளுமன்றத்துக்கு வந்து, அடுத்த முறை அரசாங்கத்தைக் கைப்பற்றலாமென நினைக்கிறார் எனவும், ஆனால் யதாரத்தத்தைப் புரிந்துக்கொண்டு அரசாங்கம் நாட்டை நன்றாக நிர்வகித்து வருவதாகவும் தெரிவித்தார்.

அரசாங்கம் கொரோனா வைரஸ் கட்டுப்படுத்தி வருவதால் எதிர்க்கட்சிக்கு பிரச்சினைகள் உருவாகியுள்ளன. கொரோனாவை வைத்து அரசியல் செய்ய முடியாத நிலை எதிர்க்கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »