நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக கொழும்பு – சிலாபம் பிரதான வீதியின் மஹாவெவ பகுதியில் வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
இதனால் குறித்த வீதியின் போக்குவரத்து தற்காலிகமாக தடைப்பட்டுள்ளதாகவும், சாரதிகள் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறு பொலிஸ் ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.