கொழும்பு துறைமுக நகரமான (Colombo Port City) இல் குறைந்தபட்சம் 1,000 அமெரிக்க டொலர் (200,000ரூபா) உடன் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் என கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணையத்தின் உறுப்பினர், நீர் வழங்கல் மற்றும் வடிகால் அமைச்சின் செயலாளர் டாக்டர் பிரியத் பந்து விக்ரம சிங்கள ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளார்.
வேலைகளின் தன்மையை பொறுத்து 1000,1500,2000,3000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்
முதல் இரு ஆண்டுகளும் 10,000 வேலைவாய்ப்புகள் மட்டுமே வழங்கப்பட உள்ளதோடு , அடுத்த 5 தொடக்கம் 10 ஆண்டுகளில் 83,000 வேலைவாய்ப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் இரண்டு ஆண்டுகளில், அடிப்படை கட்டிட நிர்மாண கட்டுமானத் துறையில் பல வேலை வாய்ப்புகள் இந்த நாட்டின் இளைஞர்களுக்காக உருவாக்கப்படும் என்றும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, அலுவலக வேலைவாய்ப்புகள் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
கணினி அறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கில மொழித் திறன் கொண்ட இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
வங்கிகள், மருத்துவமனைகள், பல்கலைக்கழகங்கள், கணினி நிறுவனங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், உயர் கல்வி நிறுவனங்கள், பல்வேறு அலுவலகங்கள், பல்வேறு சேவை வழங்குநர்கள், ஹோட்டல், விளையாட்டு வளாகங்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ், துறைமுகத்துடன் பல்வேறு தொடர்புடைய நிறுவனங்கள் மற்றும் சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்கள் போன்ற ஏராளமான வேலை வாய்ப்புகள் இளைஞர்களுக்கு கிடைக்கவுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரத்தில் 75% க்கும் அதிகமான வேலை வாய்ப்புகளை இலங்கை இளைஞர்களுக்கு அரசு வழங்க வேண்டும் என்ற முடிவை விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்ப நிறுவன மேம்பாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ சமீபத்தில் சமர்ப்பித்திருந்தார்.(trueceylon)
