கொரோனா பரவலுக்கு மத்தியில் வங்கிகளினால் வழங்கப்பட்டுள்ள கடன்களுக்கு, குறித்த வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு நிவாரணம் வழங்க தவிர்க்கும் பட்சத்தில், அது குறித்து முறைப்பாடுகளை முன் வைக்க இலங்கை மத்திய வங்கி தொலைபேசி இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
011-2477966 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புக்கொண்டு, முறைப்பாடுகளை முன்வைக்க முடியும் என மத்திய வங்கியின் வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனப் பிரிவு அறிவித்துள்ளது.
நாட்டில் பரவிவரும் கொவிட்−19 மூன்றாவது அலையினால், பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு கடன் அறவீடுகளின் போது, நிவாரணம் வழங்குமாறு அங்கீகரிக்கப்பட்ட வங்கிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு இதற்கு முன்னர் அறிவித்துள்ளது.
பாதிக்கப்பட்ட தரப்பிற்கு 2021 ஆகஸ்ட் 31ம் திகதி வரை நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய வங்கி , உரிய தரப்பிற்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
