MV எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பலை உடனடியாக ஆழ்கடலை நோக்கி இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ, சமுத்திர பாதுகாப்பு அதிகார சபைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கடலுக்கு ஏற்படும் பாதிப்புக்களை குறைக்கும் வகையிலேயே இந்த நடவடிக்கையை எடுக்குமாறு ஜனாதிபதி கூறியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.
இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
