உலகிலேயே அதி தீவிர கொவிட் வைரஸின் டெல்டா பிரிவு சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்ட கொழும்பு – தெமட்டகொட பகுதியிலுள்ள மக்கள், உரிய சுகாதார நடைமுறைகளை பின்பற்றாத செயற்படும் காணொளியொன்றை அத தெரண இன்று வெளியிட்டது.
முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை பேணுதல், பயணக் கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல் உள்ளிட்ட எந்தவொரு நடைமுறையையும் அந்த பகுதி மக்கள் கடைபிடிக்கவில்லை என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் பரவும் அதிதீவிர பாதிப்புக்களை எதிர்நோக்கக்கூடிய டெல்டா வைரஸ் பிரிவு, இன்று முதல் தடவையாக சமூகத்திலிருந்து அடையாளம் காணப்பட்டது.
இந்த வைரஸ் பரவும் பட்சத்தில், பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் அபாயம் காணப்படுவதாக சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிடுகின்றனர்.
(ADA DERANA)
