Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

கொரோனா கால ZOOM பாடங்கள் : ஒரு பாடத்திற்கு 1000 ரூபா, மாதமொன்றுக்கு 10,000 ரூபா? - பெற்றோர் அதிருப்தி

 



கொரோனா பரவலுக்கு மத்தியில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ள நிலையில், இணைய வழியாக நடத்தப்படும் கல்வி நடவடிக்கைகளுக்காக கட்டணம் அறவிடப்பட்டு வருவதாக வவுனியா பிரதேச மக்கள், கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர்.


தரம் 6 முதல் தரம் 11 வரை கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்பிக்கப்படும் ஒரு பாடத்திற்காக மாணவர் ஒருவரிடமிருந்து 1000 ரூபா அறவிடப்பட்டு வருவதாக பெற்றோர் தமது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, மாதம் ஒன்றிற்கு ஒரு மாணவரிடமிருந்து 9000 ரூபா அறவிடப்பட்டு வருவதாகவும், இணைய வசதிகளை ஏற்படுத்திக்கொள்வதற்காக மாணவர் ஒருவரிடமிருந்து 1000 ரூபா அறவிடப்பட்டு வருவதாகவும் பெற்றோர் கூறியுள்ளனர்.

இந்த கட்டணங்களுக்கு மேலதிகமாக, பிரதிகளை அச்சிடுவதற்கு மேலதிகமான கட்டணம் அறவிடப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறான கட்டண அறவீடுகளை தம்மால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை எனவும் பெற்றோர் கூறுகின்றனர்.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தாம் பொருளாதார ரீதியில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இணைய வழி கல்விக்காக இவ்வாறான பாரியளவு நிதியை செலவிட முடியாதுள்ளதாகவும் பெற்றோர், கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளனர். (TC)

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »