Our Feeds


Wednesday, June 9, 2021

www.shortnews.lk

ஏமாற வேண்டாம்; பொலிஸார் எச்சரிக்கை

 



மின்னஞ்சல் மற்றும் அலைபேசி, தொலைபேசி அழைப்புகளுக்கு மேற்கொள்ளப்படும் போலியான அழைப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர். 


பரிசு பொருட்கள் உள்ளதாகவும் அதனை பெற்றுக்கொள்ள கட்டணம் செலுத்துமாறு மின்னஞ்சல் மற்றும் அலைபேசி அழைப்புகள் வந்தால் அது தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

போலியான விடயங்களை தெரிவித்து மோசடியில் ஈடுபடும் சம்பங்கள் குறித்த பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

அத்துடன், குற்றப்புலானாய்வு துறையினர் என்று தெரிவித்து வீடுகளுக்கு வந்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள வாகன செலவுக்கான பணத்தை வைப்பு செய்யுமாறு தொலைபேசி அழைப்புகள் வரலாம் என்றும் அது தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »