Our Feeds


Tuesday, March 31, 2026

SHAHNI RAMEES

அக்குறணை பகுதியில், மாட்டிறைச்சிக்கு புதிய விலை நிர்ணயம் – மார்ச் 31 இன்று முதல் நடைமுறைக்கு!

 


அக்குறணை பகுதியில், மாட்டிறைச்சிக்கு புதிய விலை

நிர்ணயம் – மார்ச் 31 இன்று முதல் நடைமுறைக்கு! 


-அக்குறணை பிரதேச சபை தலைவர் - இஸ்திஹார் 


அக்குறணை பிரதேசத்தில் தினமும், மக்கள் அதிகமாக வாங்கும் மாட்டிறைச்சியின் விற்பனை மற்றும் அதன் விலை தொடர்பாக பல பிரச்சினைகள் எழுந்திருந்தன. அவற்றிற்கு தீர்வு காணும் நோக்கில், இன்று அக்குறணை பிரதேச சபையில் மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.


இந்த கலந்துரையாடலில் எரிபொருள் நெருக்கடி, பராமரிப்பு செலவுகள், வாடகை கட்டணங்கள் மற்றும் மாடுகளின் பற்றாக்குறை போன்ற காரணங்களால் கடை உரிமையாளர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது. மேலும், மாட்டிறைச்சி போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பினால் விலை உயர்வு ஏற்பட்டமை மற்றும் கடைகளில் சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் முக்கியத்துவம் மற்றும் கழிவுகளை முறையாக அகற்றுவதின் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.


இதன் அடிப்படையில், பிரதேச சபையின் வேண்டுக்கோளுக்கு இணங்க புதிய விலை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டது. 👇

* மாட்டிறைச்சி (Boneless Beef ) 1kg – (ரூ. 50 குறைப்புடன்) = ரூ. 2750/- 

* எலும்புடன் மாட்டிறைச்சி (with Bone Beef ) 1kg – (ரூ. 100 குறைப்புடன்) = ரூ. 2400/-

என விற்பனை செய்ய தீர்மானிக்கப்பட்டது.


இந்த புதிய விலை நிர்ணயம் 2026 மார்ச் 31 முதல் அமலுக்கு வரும் என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். தற்போதைய சவாலான பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு மற்றும் வரவிருக்கும் கொருபான் காலத்தையும் முன்னிட்டு, எதிர்வரும் நாட்களில் மேலும் விலை குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்த சவாலான பொருளாதார சூழ்நிலையிலும், பிரதேச சபையுடன் ஒத்துழைத்து விலை குறைப்பிற்கு பங்களித்த அக்குறணை மாட்டிறைச்சி கடை உரிமையாளர்களுக்கு எங்களின் நன்றிகள்!

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »