சாதாரண கொரோனா வைரஸின் செறிவைக் காட்டிலும், டெல்டா திரிபின் செறிவு 1,000 மடங்கு அதிகமாக இருப்பதாக வைரஸ் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வைத்தியர் சந்திம ஜீவந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.
சாதாரண கொரோனா வைரஸுடன் அடையாளம் காணப்படுகின்ற தொற்றாளர்களது வைரஸ் செறிவைக் காட்டிலும், டெல்டாவுடன் அடையாளம் காணப்படுகின்றவர்களின் வைரஸ் செறிவு 1,000 மடங்கு அதிகமாக உள்ளது.
இதனால் நோய் பரவல் வேகமும், பாதிப்பு வீதமும் மிக அதிகமாக இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
