இலங்கையில் மேலும் 14 பேருக்கு இந்தியாவின் டெல்டா வகை கொவிட் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், விஷேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எமது செய்திப் பிரிவிடம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் டெல்டா வகை வைரஸ் தொற்றாளர்கள் 5 பேர் இனங்காணப்பட்டதை அடுத்து மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் இனங்காணப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.