Our Feeds


Monday, July 5, 2021

www.shortnews.lk

A/L பரீட்சைக்கு விண்ணப்பிக்க வேண்டிய அரச இணையதளம் மற்றும் மேலதிக விபரங்கள் இணைப்பு

 




கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை -2021 ஆம் ஆண்டுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுளளதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.


எவ்வாறாயினும், குறித்த விண்ணப்பங்கள் இணைய வழி (Online) முறை மூலமாக மாத்திரம் ஏற்றக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, தனியார் மற்றும் அரச பாடசாலை விண்ணப்பதாரிகளின் விண்ணப்பங்கள் நாளை முதல் இம்மாதம் 30 ஆம் திகதி வரை ஏற்றுக் கொள்ளப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.




முக்கிய குறிப்பு:


அரச பாடசாலையில் கற்றுக்கொண்டு தனிப்பட்ட முறையில் விண்ணப்பிப்பது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு விண்ணப்பிக்குமிடத்து பரீட்சைப் பெறுபேற்றை இரத்து செய்து எதிர்வரும் காலங் களில் பரீட்சைகளுக்குத் தோற்றத் தடை விதிக்கப்படும்.



Applying or appearing as a private candidate by being a student in a government school is entirely prohibited. Committing of such offense shall be subjected to the invalidating of examination results and debarring from sitting any future examinations.








Subscribe to this Blog via Email :
Previous
Next Post »