Our Feeds


Monday, July 12, 2021

www.shortnews.lk

அது ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எடுத்த பழைய புகைப்படம் - ரனில் விக்கிரமசிங்க பதில்

 



சில நாட்களுக்கு முன் சமூக வலைதளங்களில் வெளியாகியிருந்து ரனில் - மஹிந்த சந்திப்பு பற்றிய புகைப்படங்கள் பழையவை என்றும் அவை கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்றும் ரனில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


ஐ.தே.க தலைவர் ரனில் விக்கிரமசிங்க மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கிடையிலான சந்திப்பொன்று பிரதமர் மஹிந்தவுடன் இடம் பெற்றிருந்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டிருந்தன. 


குறித்த புகைப்படங்கள் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள ஐ.தே.க தலைவர் ரனில் விக்கிரமசிங்க ஒன்றரை மாதங்களுக்கு முன்னர் தமக்கு நெருக்கமான தொழிலதிபர் ஒருவரின் பிறந்த தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டிருந்த போதே அவை எடுக்கப்பட்டன. குறித்த பிறந்த தின கொண்டாட்டத்தில் கடந்த காலங்களிலும் நானும், மஹிந்தவும் பங்கெடுத்துள்ளோம். இப்போது இந்த புகைப்படங்களை பரப்பி தேவையற்ற குழப்பத்தை உண்டாக்க முனைகின்றனர். 


Subscribe to this Blog via Email :
Previous
Next Post »