(எம்.மனோசித்ரா)
பயணக்கட்டுப்பாடுகள் சில விதிக்கப்பட்டுள்ள போதிலும், தொற்றாளர்களின் எண்ணிக்கையில் கனிசமானளவு வீழ்ச்சியை அவதானிக்க முடியவில்லை என்று இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்தார்.
மே மாதத்தில் பயணக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டதன் மூலம் அதிகாரிகள் எதிர்பார்த்தபடி கொவிட் -19 தொற்று பரவல் கட்டுப்படுத்தக் கூடிய அளவுக்கு கொண்டு வரப்பட்டது. இருப்பினும், இது தொற்று பரவலானது கணிசமான குறைப்பை ஏற்படுத்தவில்லை என்றும் விசேட வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.
தற்போதைய கால கட்டத்தில் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்துவது கொவிட் -19 நோயாளிகளின் குறைப்பின் அளவை தீர்மானிக்கிறது. எனினும் கொரோனா வைரஸின் நான்காவது அலையின் முதல் கட்டத்தை நோக்கி இலங்கை மெதுவாக நுழைகிறது என்று அவர் மேலும் எச்சரித்தார்.
