Our Feeds


Saturday, July 17, 2021

www.shortnews.lk

கொழும்பில் அதிகரிக்கும் டெல்டா திரிபு கொரோனா - பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கும் சுகாதார துறை

 



இலங்கையில் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் கொழும்பு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என கொழும்பு மாநகர சபையின் பிரதான வைத்திய அதிகாரி மருத்துவர் ருவன் விஜேமுனி தெரிவித்தார்.


அதன்படி, இறுதியாக அடையாளம் காணப்பட்ட 18 பேரில் 11 பேர் கொழும்பில் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவர்களின் 05 பேர் கெத்தாராம விளையாட்டரங்கில் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.

அவர்களில் இருவர் தெமடகொடையிலும் இரண்டு பேர் வட கொழும்பிலும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களிலும் டெல்டா திரிபுடனான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக பொதுமக்கள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைவாக செயற்படுமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.

இதேவேளை, இலங்கையில் இதுவரையில் 36 பேர் டெல்டா திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »