ஆப்கானிஸ்தான் ஜனாதிபதி மாளிகைக்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 3 ரொக்கெட்டுகள் வீழ்ந்துள்ளன.
புனித ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் ஜனாதிபதி அஷ்ரப் கானியும் சிரேஷ்ட அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தபோது உரையாற்றிக்கொண்டிருந்தபோது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த ரொக்கெட் தாக்குதல்களுக்கு எவரும் உரிமை கோரவில்லை.
ஆப்கானிஸ்தானிலிருந்து வெளிநாட்டுப் படைகள் வெளியேற ஆரம்பித்துள்ள சூழலில் தலிபான்கள் புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ள நிலையில் தலைநகர் காபூல்மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் இதுவாகும்.
ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சின் பேச்சாளர் மீர்வாய்ஸ் ஸ்டானிக்ஸாய் இது தொடர்பாக கூறுகையில், பிக் அப் வாகனமொன்றிலிருந்து இந்த ரொக்கெட்டுகள் ஏவப்பட்டுள்ளதாக கருதப்படுவதாகவும், ஆரம்பநிலை தகவல்களின்படி, எவருக்கும் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

