Our Feeds


Friday, July 9, 2021

www.shortnews.lk

SJB க்குள் எழுந்துள்ள தமிழ் பிரச்சினை − ஆர்ப்பாட்டத்தின் இடையில் வெளியேறிய மனோ கணேசன் & விக்னேஷ்வரன் - PHOTOS

 



அரசாங்கத்தின் அடக்கு முறைகளுக்கு எதிராக இன்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தமிழ்  மொழி சார்ந்த பிரச்சினையொன்று எழுந்துள்ளது.


கொழும்பு − சுதந்திர சதுக்கத்தில் இன்று ஐக்கிய மக்கள் சக்தியினால் ஆர்ப்பாட்டமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதன்போது, ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிரான பதாகைகளை ஏந்தியவாறு தமது எதிர்ப்புக்களை வெளியிட்டிருந்தனர்.

எதிர்ப்பு நடவடிக்கைக்காக கொண்டு வரப்பட்ட அனைத்து பதாகைகளும் சிங்கள மொழியில் எழுதப்பட்டிருந்ததை அவதானித்த சிலர், எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துக்கொள்ளாது வெளியேறியிருந்தனர்.

குறிப்பாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வருகைத் தந்த பாராளுமன்ற உறுப்பினர் C.V.விக்னேஸ்வரன் ஆகியோரே இவ்வாறு இடைநடுவில் வெளியேறியுள்ளதாக கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதி செயலாளர் உமாசந்திரா பிரகாஷ் மாத்திரமே, தமிழரை பிரதிநிதித்துவப்படுத்தி, ஆர்ப்பாட்டத்தில் இறுதி வரை இருந்துள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷூம் சிங்கள மொழி பதாதையை ஏந்திக் கொண்டிருந்தார்.

கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை முன்னிலைப்படுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, கட்சியிலுள்ள தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் எவ்விதத்திலும் உதவிகளை வழங்க முன்வரவில்லை என கட்சிக்குள் பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள், ஆர்ப்பாட்டத்திற்கு உதவி வழங்க முன்வராமையினாலேயே, தமிழ் பதாகைகளை எழுத முடியாது போனதாக கட்சியின் உள்ளக தகவல்கள் ட்ரூ சிலோனுக்கு உறுதிப்படுத்தின.

ஐக்கிய மக்கள் சக்திக்குள் இதற்கு முன்னரும் இவ்வாறான பல்வேறு பிரச்சினைகள் காணப்பட்ட நிலையில், தற்போது ஐக்கிய மக்கள் சக்திக்குள் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மதிப்பு படிப்படியாக குறைவடைந்து வருவதாக கட்சியின் தகவல்கள் கூறுகின்றன.

இந்த நிலைமை தொடருமாக இருந்தால், ஐக்கிய மக்கள் சக்திக்குள் பிளவு ஏற்படும் சாத்தியம் எழுந்துள்ளதாக கூறப்படுகின்றது.






Subscribe to this Blog via Email :
Previous
Next Post »