தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 6 ஆம் திகதியுடன் தளர்த்துவதற்கு அரச உயர்மட்டம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தற்போதும் நடைமுறையில் உள்ள மாகாண போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் கடுமையான சட்டங்களை தொடர்ந்து விதிக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும் அரசாங்கத்தின் இந்த முடிவுக்கு மருத்துவ நிபுணர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.(TNT)
