20 ஆண்டுகளுக்கு முன் உஸாமா பின் லேடனை தேடுகிறோம் என்று கூறி ஆப்கானிஸ்தானின் மீது போர் தொடுத்தது அமெரிக்காவின் அப்போதைய ஜோர்ஜ் புஷ் அரசு.
20 வருடங்களின் பின்னர் இன்னொரு நாட்டுக்காக எமது வீரர்களை இழக்க முடியாது எனக் கூறி ஆப்கானிஸ்தானிலிருந்து இன்று மொத்தமாக வெளியேறியுள்ளது அமெரிக்கா.
வியட்னாம் போருக்கு பின்னர் அமெரிக்கா படுமோசமான பின்னடைவை சந்தித்து வெளியேறிய நாடாக ஆப்கானிஸ்தான் பார்க்கப்படுகிறது. எந்த தாலிபான்களை தீவிரவாதிகள் எனக் கூறி தாக்குதல் நடத்தி ஆட்சியை கவிழ்த்ததோ அதே தாலிபான்களிடம் தற்போது ஆப்கானிஸ்தானை கையில் கொடுத்து விட்டு வெளியேறுகிறது அமெரிக்கா.
தாலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒப்பந்தப்படி இன்று இறுதியாக முழு அமெரிக்க இராணுவமும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறியது. இறுதியாக ஆப்கானை விட்டு வெளியேறிய படையின் கடைசி வீரர் விமானத்தில் ஏறுவதற்காக செல்லும் காட்சியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
