Our Feeds


Sunday, August 22, 2021

www.shortnews.lk

ரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்: ஈஸ்டர் தின தாக்குதல் குறித்து பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவிப்பு.

 



ஈஸ்டர் தின குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களைப் போன்று, அந்த தாக்குதலின் பின்னால் இருந்தவர்களும் அதேபோன்ற விதியை சந்திக்க நேரிடும் என, பேராயர் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.


ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்டவர்களை நினைவுகூரும் வகையில், பேராயர் இல்லத் தேவாலயத்தில் நடைபெற்ற பிரார்த்தனை நிகழ்வின் போது அவர் இதனைக் கூறினார்.


அங்கு பேசிய அவர்; அந்தக் குற்றங்களைச் செய்தவர்கள் கடந்த காலங்களைப் போலவே தண்டிக்கப்படுவார்கள் என்றார்.


“கடந்த காலங்களில் நம் நாட்டின் சில அரசியல்வாதிகள் வன்முறையில் ஈடுபட்டு பலரைக் கொன்றமை போன்று, அவர்களும் வன்முறையான வகையில் மரணித்ததைப் பார்த்தோம். ஈஸ்டர் தின தாக்குதலுக்குப் பின்னால் இருந்தவர்களுக்கும் அதே விதி காத்திருக்கிறது” என்றும் அவர் கூறினார்.


“ஈஸ்டர் தின கொலைக்கு பின்னால் யார் இருந்தார்கள் என்பதை கடவுள் வெளிப்படுத்துவார். அதைச் செய்ய நாங்கள் அவரிடம் பிரார்த்தனை செய்கிறோம். கொடிய தாக்குதல்களுக்குப் பின்னால் உள்ள ரகசியங்கள் மறைக்கப்பட அனுமதிக்க மாட்டோம்” எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »