படுகொலை செய்யப்பட்ட ஈரானின் உச்ச தலைவர்
அயதுல்லாஹ் கொமய்னியின் ஜனாஸா நல்லடக்கத்தில் பங்கேற்பதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம்நேற்று (02) வியாழக்கிழமை தெஹ்ரான் பயணமானார்.
ஈரான் அரசாங்கத்தின் அழைப்பின் பேரிலேயே அவர் இந்த விஜயத்தினை மேற்கொண்டுள்ளார்.
கடந்த பெப்ரவரி 28ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் ஈரான் மீது நடத்திய வான் வழித் தாக்குதலின் கமேனி கொல்லப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து பிராந்தியத்தில் கடுமையான போர் இடம்பெற்றதால் அவரது ஜனாஸா நல்லடக்கம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது, அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே தற்காலிக அமைதிப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் பல நாட்கள் நீடிக்கும் இந்த ஜனாஸா ஊர்வலம் இடம்பெறவுள்ளது.
