(இராஜதுரை ஹஷான்)
சுதந்திர கட்சியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில், போதைப்பொருள் கடத்த குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்களுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என சுதந்திர கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.
நீதிமன்றத்தினால்வழங்கப்படும் மரண தண்டனையை பெயரளவில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல், செயலளவில் செயற்படுத்த வேண்டும் என்று உணரப்பட்டது.
மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தமைக்கு கடுமையான எதிர்ப்புக்கள் சர்வசே மற்றும் உள்ளக மட்டத்தில் எழுந்தன. காலப்போக்கில் இதனை செயற்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ரிஷாத் பதியுதீனின் வீட்டில் பணி புரிந்த 16 வயது சிறுமி மரணித்த சம்பவமும் அதனை தொடர்ந்து வெளியாகியுள்ள விடயங்களும் வன்மையாக கண்டிக்கத்தக்கன என்றும் அவர் தெரிவித்தார்.
