Our Feeds


Friday, August 27, 2021

www.shortnews.lk

BREAKING: நாடு தொடர்ந்து முடக்கப்படுவது குறித்து பிரதமர் சற்று முன் வெளியிட்ட கருத்து.

 



நாட்டை நீண்ட காலத்திற்கு மூடுவது, அடிப்படையற்றது என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.


அலரிமாளிகையில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டை கொரோனாவிடமிருந்து காப்பாற்றுவதற்கு மக்களின் ஒத்துழைப்பு அவசியம் எனக் கூறி அவர், நாடு முடக்கப்பட்டிருந்த காலப் பகுதியில் மக்கள் வழங்கிய ஆதரவுக்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்றை முழுமையாக ஒழிப்பதற்கு சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு பிரிவினர் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை பிரதமர் வரவேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »