Our Feeds


Friday, August 27, 2021

www.shortnews.lk

BREAKING: லொக்டவுன் காலத்தில் எந்தெந்த துறைகள் தடையின்றி செயல்பட முடியும்? - இராணுவ தளபதி விளக்கம்

 



தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு செப்டெம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணிவரை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.


இந்த காலப் பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய சேவைகள், மருந்து தயாரிப்பு மற்றும் விநியோகம், விவசாயம், ஆடைக் கைத்தொழில் ஆகியவற்றை எவ்வித இடையூறுமின்றி முன்னெடுக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத்தவிர, 60 வயதுக்கு மேற்பட்ட அனைத்து பிரஜைகளுக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கான வேலைத்திட்டம் சுகாதாரத் துறையினரால் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »