Our Feeds


Monday, August 30, 2021

www.shortnews.lk

JUST_IN: பாலூட்டும் தாய்மாருக்கு கொரோனா தொற்றினாலும், பாலூட்டுவதை நிறுத்தக் கூடாது - விசேட வைத்தியர் அறிவுரை.

 



(எம்.ஆர்.எம்.வசீம்)


தாய்மாருக்கு கொவிட் -19 தொற்று ஏற்பட்டாலும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தக்கூடாது என கொழும்பு சீமாட்டி சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்திய நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்தார்.


கொவிட் -19 தொற்றுக்குள்ளான தாய்மார் குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவது தொடர்பில் விளக்குகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், தாய்ப்பால் ஊடாக கொவிட் -19 தொற்று குழந்தைகளுக்கு பரவுவதாக இதுவரை எந்தவொரு ஆய்வின் மூலமும் உறுதிப்படவில்லை.

எனவே தாய்க்கு கொவிட் -19 தொற்று ஏற்பட்டாலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதை நிறுத்தக்கூடாது. தாய் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகி, குழந்தைக்கு தொற்று இல்லாத நிலையிலும் தாய்ப்பால் ஊட்டுவதை தொடராக மேற்கொள்ளவேண்டும்.

இவ்வாறான நிலைமையில் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார், முகக்கவசம் அணிந்து, தங்களது முகத்தை சற்று பின்னுக்கு திருப்பிக் கொண்டு, பால் ஊட்டும் நடவடிக்கையை மேற்கொள்ளலாம். ஏனெனில் குழந்தைக்கு தனது தாயின் முதல் பால் கட்டாயமாக கிடைக்கப் பெற வேண்டும். தாயின் முதல் பாலின் மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி வேறு எந்த உணவின் மூலமும் பெற்றுக்கொள்ள முடியாது என்றார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »